மும்பை மாநகராட்சி அதிகாரி மீது நகைச்சுவை நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு

Bookmark and Share

மும்பை மாநகராட்சி அதிகாரி மீது நகைச்சுவை நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நகைச்சுவை நடிகரும், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா மும்பையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் உரிய அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியதாகவும், இதற்கு மாநகராட்சி சார்பில் அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரி ஒருவர் அவரை நேரில் சந்தித்து, இந்த விவகாரத்தை சாதகமாக பரிசீலிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கபில் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார்.

இதுபற்றி டுவிட்டரில் பதிவு செய்த 35 வயது நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, அதில், பிரதமர் மோடி பெயரையும் குறிப்பிட்டு, “கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு ரூ.15 கோடி வரை நான் வரி செலுத்தி இருக்கிறேன். இப்போது, என்னுடைய அலுவலக கட்டிட பணிக்காக இன்னமும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டுமா? நரேந்திர மோடி அவர்களே, இது தான் நீங்கள் அறிவித்த நல்ல நாட்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

கபில் சர்மாவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையறிந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக இதில் தலையிட்டு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். மேலும், இதுபற்றி டுவிட்டரில், “உங்களிடம் (கபில் சர்மா) லஞ்சம் கேட்ட அதிகாரியின் விவரங்களை தெரியப்படுத்துங்கள். குற்றவாளியை நாங்கள் தப்பவிட மாட்டோம்” என்று தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்தார்.

இதனிடையே, கபில் சர்மாவிடம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதற்கு வருத்தம் தெரிவித்த மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு துறை தலைமை என்ஜினீயர் மனோகர் பவார், “அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிடுங்கள். அப்போது தான் எங்களால் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். விசாரணைக்கு கபில் சர்மா ஒத்துழைப்பார் என்று நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.

அதேசமயம், இந்த விவகாரம் உள்ளூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மும்பை மாநகராட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிவசேனா, கபில் சர்மாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதில் அளித்தது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷா காயந்தே நிருபர்களிடம் கூறுகையில், “கபில் சர்மாவின் வாழ்வில் நடப்பது பற்றி குறிப்பிட இது ஒன்றும் காமெடி நிகழ்ச்சி அல்ல. அவரிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியின் பெயரை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால், ஒட்டுமொத்த அத்தியாத்தையும் வழக்கம்போல் பொதுமக்கள் காமெடி நிகழ்ச்சியாக தான் பார்ப்பார்கள். கைதட்டி சிரிப்பார்கள். பின்னர், அதை மறந்துவிடுவார்கள்” என்றார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கோரி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., ராம்கதம் மும்பை போலீசின் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் அசோக் துதே தெரிவித்தார். 


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions