இந்தநாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்- ரஜினி சந்திப்புப் பற்றி கபிலன்

Bookmark and Share

இந்தநாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்- ரஜினி சந்திப்புப் பற்றி கபிலன்

ரஜினியின் கபாலி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவரும் நிலையில் அப்படத்தில் பாடல்கள் எழுதும் கபிலன் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார். அவரைச் சந்தித்த அனுபவங்களைப் பற்றி கபிலன் நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார், “நீண்டஇடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். பார்த்தவுடனே மிக சந்தோசமாய் வரவேற்றார்.

சந்திரமுகி படத்தில் நான் எழுதிய பாடல்வரிகளைப் பற்றிச் சொன்னபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தில் எழுதும் பாடல்களைப் பற்றிக் கேட்டார்.

அதன்பின்னர், பல விஷயங்களைப் பேசிவிட்டு என்னுடைய குடும்பம் பற்றியும் பேச்சு வந்தது, என் பையன் பெயர் பௌத்தன் என்று சொன்னதும், பௌத்தம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார். 

பௌத்தம் பற்றி மிகவிரிவாகப் பேசத் தொடங்கி சித்தர் பாடல்கள் மற்றும் மகாபாரதக்கதைகள் பற்றியெல்லாம் அவர் பேசியதைக் கேட்டு வியந்துபோனேன். செவிக்கு விருந்து கொடுத்தது போக சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார். 

அவருடன் அமர்ந்து சாப்பிடத் தயங்கி, நான் இயக்குநருடன் சாப்பிடுகிறேன் என்றேன். உடனே என்னையும் அழைத்துக்கொண்டு இயக்குநர் ரஞ்சித்திடம் போய், கபிலன் என்னுடன் சாப்பிடட்டும் என்றார், நான் நெகிழ்ந்து போனேன். 

எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அவற்றைச் சாப்பிடக்கொடுத்தார். என் வாழ்க்கையில் அவரைச் சந்தித்த இந்தநாள் மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டது” என்றார் பாடலாசிரியர் கபிலன்.

 


Post your comment





Related News
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
விவேகம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட கபிலன் வைரமுத்து
ஃபேஸ்புக், ட்விட்டருக்கு மாற்றாக புதியதோர் இணையம் செய்வோம்! - கபிலன் வைரமுத்து
அரசியல், வணிகமும் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் நாம் விழுந்து எழுந்து ஓடுகிறோம்: கபிலன்வைரமுத்து பேச்சு
பேய்கள் ஜாக்கிரதை படத்தில் பெயர் வரிசையை மாற்றச் சொன்ன கபிலன்வைரமுத்து!
கபாலியோடு கைகோர்த்த கபிலன்!
ரஜினியின் அறிமுக பாடலை எழுதும் கபிலன்
ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்? கபிலன் வைரமுத்து விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions