கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !

Bookmark and Share

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார்.

நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.  இதன் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions