‘கடலோரக் கவிதைகள்’ ராஜா…! சினிமாவே வேண்டாம், கதறியபடி ஓடிய கொடுமை..!!

Bookmark and Share

‘கடலோரக் கவிதைகள்’ ராஜா…! சினிமாவே வேண்டாம், கதறியபடி ஓடிய கொடுமை..!!

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அறிமுகப்படுத்திய நடிகர், நடிகையர் ஏராளம்! அவர்கள் அனைவருமே… திரையுலகில் அதிகம் வெற்றி பெற்று சாதித்தவர்கள்.

அப்படித்தான் கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜாவினால் அறிமுகம் ஆனவர் நடிகர் ராஜா. நல்ல உயரம், வசீகரத்தோற்றம், அழகான சிரிப்பு..! படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

கல்லூரி மாணவர்கள் ராஜா.. ராஜா என கொண்டாடினர். காதல் கடிதங்கள் குவிந்தது. ராஜா ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா ஆனார். தனி ஹீரோவாக ஓரிரு படங்கள் வந்தது.

ஆனால், எதிர்பார்த்தது போல பெரிய வெற்றி அடையவில்லை. இரண்டாம் ஹீரோ.. குணசித்திர கேரக்டர் என வர ஆரம்பித்தது. வேறு வழி இன்றி நடிக்க ஆரம்பித்தார் ராஜா.

அவருக்கு ஆறுதல் தருவது போல சின்ன சின்ன படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் வந்ததால் நம்பிக்கை இழக்காமல் திரையுலகில் தாக்குப்பிடித்தார்.

ம்கூம்..! 20 வருடங்கள் அவர் எதிர்பார்த்தது போல எந்த ஹீரோ வாய்ப்பு வரவில்லை. வந்தது எல்லாமே துணைப்பாத்திரங்கள். அவருக்குப்பின் வந்த இளம் ஹீரோக்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார் ஆனார்கள்.

வடிவேலு கூட பெரிய இடத்தையும், பெரிய சம்பளத்தையும் எட்டினார். ஆனால், ராஜாவால் 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டி சம்பளம் வாங்க முடியவில்லை.

வாழ்க்கையே வெறுத்து விட்டார் ராஜா. இருக்கும் பணத்தை வைத்து கிரானைட் தொழில் ஆரம்பித்தார். சினிமாவே வேண்டாம்டா சாமி.. என்று ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு.. ஓடியே போய்விட்டார்.

இன்று கடலோரக் கவிதைகள் ராஜா.. பெரிய தொழிலதிபர் ராஜா.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions