டூயட்டுக்கு ஆடிய குதிரைகள்

Bookmark and Share

டூயட்டுக்கு ஆடிய குதிரைகள்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் காதல் காலம். சந்துரு, நித்யா ஷெட்டி, சார்வி செக்குரி என்ற புதுமுகங்கள் நடிகிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்குகிறார். விஜய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெயானந்தன் இசை அமைக்கிறார். ஜி.செல்வராஜ் தயாரிக்கிறார்.

"இது அக்மார்க் கிராமத்து காதல் கதை. எந்தவித சினிமா பூச்சும் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம். கிராமங்களில்தான் இன்றும் உண்மையான காதல் வாழ்கிறது என்பதை ஆணித்தரமாக சொல்கிற படம்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரக்  கிராமங்களில் படப்படிப்பு நடத்தியுள்ளோம். ஒரு பாடலை வித்தியாசமான படமாக்க நினைத்தோம். 30 ஏக்கர் கரும்பு தோட்டத்தின் நடுவில் பாடல் காட்சி படம்பிடித்தோம்.

2 ஏக்கர் கரும்பு பயிர்கள் வீணானது அதற்குரிய தொகையை கொடுத்துவிட்டோம். கோபி பகுதியில் நடக்கும் குதிரை சந்தையில் ஒரு பாடல் காட்சி படமாக்கினோம். அந்த சந்தைக்கு வரும் நடனமாடும் குதிரைகள் ஹீரோ, ஹீரோயினுடன் சேர்ந்து நடனமாடி இருக்கிறது. இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் சோமசுந்தரா.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions