நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது

Bookmark and Share

நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது

சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்து மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த நடிகை சந்தியாவின் திருமணம் ஒருவழியாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் நடிகை சந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் சந்தியாவுக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்தது. சந்தியா சென்னையில் உள்ள வீட்டில் சிக்கிக் கொண்டார். வெள்ளத்தால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. சந்தியாவின் குடும்பத்தாரால் மாப்பிள்ளை வீட்டாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை தான் அவர்களின் செல்போன் வேலை செய்து மாப்பிள்ளை வீ்ட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை கேரளாவில் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதயடுத்து கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சந்தியா, வெங்கட் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நிலைமை சரியான பிறகு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions