காதலில் பெண்களின் நிலைமை சொல்லும் ‘காதல் கசக்குதய்யா’

Bookmark and Share

காதலில் பெண்களின் நிலைமை சொல்லும் ‘காதல் கசக்குதய்யா’

அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா  எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழுங்கும் ‘காதல் கசக்குதய்யா’ டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பிச்சைக்காரன், இறைவி, குற்றமே தண்டனை போன்ற தரமான படங்களை வெளியிட்ட  கே .ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது . துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ்  மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார் .  துருவா இதற்கு முன் திலகர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

வெண்பா கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியின் கதாபாத்திற்க்கு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்  இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  ‘சேதுபதி ‘ படத்தில் மூர்த்தியாக நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்த தரண்  இசையமைத்திருக்கிறார் . போடா போடி-யில் ‘ஹரே ராம ஹரே கிருஷ்ணா ‘ என்ற பாடலுக்கு பின் இப்படத்தில் ‘I am a Complan Boy’ என்ற பாட்டை பாடியுள்ளார். சென்னையை சுற்றி படமாக்கப்பபட்ட இப்படம் 24 நாட்களில் அதிவேகமாக படமாக்கப்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் , கார்த்திக் சுப்பாராஜ் , நலன் குமாரசாமி  போன்ற இயக்குனர்களின் வரிசையில் துவாரக்  ராஜாவும் குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார் . இயக்குனர் கூறுகையில் , காதல் கசக்குதய்யா, அதன் தலைப்பிற்கேற்ற ஒரு குதூகலமான Rom-Com Entertainer.  மேலும் இது ஒரு ‘Conversational Film’.
முழுக்கதையையும் விஷுவல்லாக  மட்டும் இல்லாமல் ‘Catchy phrases’ அல்லது நம்மூரில் ‘பஞ்ச்’ என்று சொல்லப்படும் வசனங்களின் வழியாகவே முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் Before Sunrise, மற்றும் இயக்குனர் Woody Allen-ன் படங்கள் பிரதானமாக  Conversational Film-மாக தான் இருக்கும் .

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ‘இது ஒரு வாயாடி படம்’. அதுமட்டுமில்லை பொதுவாக ‘Why this Kolaveri di?’ என்று காதலின் பெயரால் பெண்களை திட்டி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில்,  காதலை குறித்து பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரிக்கிறது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions