18-வது ஆண்டை கொண்டாடும் காதலுக்கு மரியாதை!

Bookmark and Share

18-வது ஆண்டை கொண்டாடும் காதலுக்கு மரியாதை!

திரையுலகத்தில் நாயகனாக அறிமுகமாகி பின் கொஞ்சம் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜய்க்கு ரசிகர்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த படம் தான் காதலுக்கு மரியாதை. 

1997ம் ஆண்டு வந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் அவருக்கு அதிகமான பெண் ரசிகைகளையும் தேடிக் கொடுத்தது. அந்தப் படம்தான் விஜய் நடித்து அதிக வசூலை அள்ளிக் கொடுத்த படமாக அப்போது அமைந்தது.

அதன் பிறகே விஜய்க்கென்று மிகப் பெரிய மார்க்கெட் தமிழ்த் திரையுலகத்தில் உருவாகியது. அப்படிப்பட்ட ஒரு படம் வெளிவந்து நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த இயக்குனர் பாசிலின் இப்படத்தை இயக்கினார்.

விஜய்யின் அமைதியான காதல் நடிப்பும், ஷாலியின் அப்பாவித்தனமான காதல் நடிப்பும், இளையராஜாவின் இனிமையான பாடல்களும், சார்லி, தாமு ஆகியோரின் மதிப்பு மிக்க நட்புடன் கூடிய காமெடிகளும், சிவகுமார், ஸ்ரீவித்யாவின் மகன் பாசமும், ராதாரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோரின் பாசமான நடிப்பும் இந்தப் படத்தைப் பற்றிப் பேச வைத்தது. 

என்றுமே மறக்க முடியாத ஒரு காதல் படமாக அமைந்த காதலுக்கு மரியாதை படம் இன்று வரை தமிழ்த் திரைப்பட ரசிகர்களை தாலாட்டிக் கொண்டிருக்கும் படமாகவும் அமைந்துவிட்டது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions