காதலும் கடந்து போகும் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

காதலும் கடந்து போகும் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் 'சேதுபதி', தர்மதுரை' 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கிறது. இதில், விஜய் சேதுபதி போலீசாக நடித்துள்ள ‘சேதுபதி’ படம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதுபதி படத்திற்கு முன்னதாக 'காதலும் கடந்து போகும்' காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால், தற்போது மார்ச் 11ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நலன்குமாரசாமி இயக்கியுள்ள இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
‘காதலும் கடந்து போகும்’ தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி!
காதல் இல்லாத படம் ‘காதலும் கடந்து போகும்’!
காதலர் தினத்தன்று காதலும் கடந்து போகும்!
காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் 'காதலும் கடந்து போகும்'
யூடியூப்பில் வெளியாகும் ஏவி.எம் மின் ‘இதுவும் கடந்து போகும்’..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions