`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி

Bookmark and Share

`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி

தன்னை ஒரு படைப்பாளியாக 'கடுகு' திரைப்படம் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றி மற்றும் சினிமா விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுகள் என இவை அனைத்தும், விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தை தந்து இருக்கின்றது. 

`கடுகு' படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்த படத்தில்  இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதுகுறித்து கடுகு படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது, 

பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம், எதிர்பார்த்தததை விட நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அவருடைய யதார்த்தமான நடிப்பை பார்த்த சூர்யா, தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ஒரு நடிகராக திரையில் பார்த்து மகிழ்ந்த லிங்குசாமி, பாரத் சீனியை அழைத்து பாராட்டியுள்ளார். 

இந்த பாராட்டுக்கள் பாரத் சீனிக்கு மிகுந்த மகிழ்ச்சி மட்டுமின்றி, ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது. அவருடைய நகைச்சுவை பாணியும், நகைச்சுவை வசனங்களும், ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்று தந்துருக்கிறது என்று கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions