நான் மிகவும் அதிர்ஷ்டசாலி : காஜல் அகர்வால்

Bookmark and Share

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி : காஜல் அகர்வால்

நான் எந்த மொழியில் நடித்தாலும், அந்த படங்கள் சிறப்பாக ஓடுகின்றன. அந்தவகையில், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் அல்லாமல், தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் அகர்வால் கூறியுள்ளதாவது, என்னை பொருத்தவரை சமீபத்தில் வந்த எல்லா படங்களும் நன்றாக ஓடி இருக்கின்றன. சிலருக்கு ஒரு மொழியில் வரவேற்பு இருக்கும். மற்ற மொழி படங்கள் கைகொடுக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை எல்லா மொழி படங்களும் நன்றாக ஓடுகின்றன. இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். ரசிகர்கள் நல்ல படங்களை எதிர்பார்க்கிறார்கள்.

நாங்களும் நல்ல கதை என்றுதான் தேர்ந்தெடுத்து நடிக்கிறோம். நூறு சதவீத உழைப்பையும் கொடுக்கிறோம். ஆனால் சில நேரம் அது தவறாகி விடுகிறது. எதிர்பார்த்தபடி படம் ஓடுவது இல்லை. ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டு நடிக்கிறேன். என் திருமணம் பற்றி தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது.

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் நானும் திருமணம் செய்து கொள்வேன். எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல முடியாது என்று காஜல் அகர்வால் கூறினார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions