திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா?: காஜல் அகர்வால் ஆவேசம்

Bookmark and Share

திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா?: காஜல் அகர்வால் ஆவேசம்

நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்க தொடங்கி விடுகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளுக்கு அதோடு சினிமாவும் முடிந்து விடுகிறது என்றும் பேசுகிறார்கள்.

இதனால்தான் சினிமாவையும் நடிப்பையும் நேசிக்கும் கதாநாயகிகள் திருமணம் என்ற பேச்சை எடுப்பதற்கே பயப்படுகிறார்கள்.

என்னிடமும் நிறைய பேர் திருமணத்துக்கு தயாராகி விட்டீர்களா? மாப்பிள்ளை முடிவாகி விட்டதா என்று விசாரித்தபடி இருக்கிறார்கள்.

திருமணத்துக்கும் நடிப்புக்கும் முடிச்சு போட்டு பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது. 25 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் திருமணம் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மட்டும் என்ன குறைச்சல்?

திருமணம் ஆன நடிகைகள் மார்க்கெட் இல்லாமல் போய் விடுவார்கள் என்று வேறு விதமாக பேசுவது ஏன்?

நடிகைகளுக்கும் மற்ற பெண்களைப்போல் நடிப்பு ஒரு தொழில்தான். வேலைக்கு செல்வது மாதிரிதான் படப்பிடிப்புகளுக்கு வருகிறார்கள்.

திருமணம் ஆன பெண்கள் வேலைக்கு செல்லும்போது நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு நடிக்க வருவதில் என்ன தவறு இருக்கிறது.

திருமணம் ஆன நடிகைகள் மார்க்கெட் இழந்து விடுவார்கள் என்று பேசுவதையும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குவதையும் பார்க்கும் போது எனக்கு கோபமாக வருகிறது.

25 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் நடிகைகளும் தற்போது இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தை பெற்ற நடிகைகளும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல மாற்றம். எனது திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. கதாநாயகியாக நான் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கிறது.

அதோடு மனதுக்கு பிடித்த பையனும் கிடைக்க வேண்டும்.”

இவ்வாறு காஜல் அகவர்வால் கூறினார். 


Post your comment





Related News
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
அஜித்துக்கும் இந்த நாயகிக்கும் இன்னும் 20 தானாம்- என்னது அது?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி
நடிகை காஜல் அகர்வாலுக்கு தடை போட்ட அஜித் பட இயக்குனர்
நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கின்றாரா!
தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்
கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்வேன்- நடிகையின் நம்பிக்கை
பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions