காஜல் அகர்வால் ஆபாசமாக நடித்ததால் தணிக்கை குழு எதிர்ப்பு!

Bookmark and Share

காஜல் அகர்வால் ஆபாசமாக நடித்ததால் தணிக்கை குழு எதிர்ப்பு!

காஜல் அகர்வால் ‘டூ லப்ஷான் கி கஹானி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகன் ரன்தீப் ஹூடாவுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க அவர் மறுத்து வந்தார். படுக்கை அறை காட்சிகள் மற்றும் அரைகுறை உடை காட்சிகளில் நடிப்பதையும் தவிர்த்தார்.

ஆனால், இந்தி படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தது திரையுலகினரை அதிர வைத்தது. இந்த முத்தகாட்சி ஆபாசமாக நடித்ததாக எதிர்ப்பு: காஜல் அகர்வாலின் முத்தக்காட்சி நீக்கி தணிக்கை குழு நடவடிக்கை படங்கள் இணையதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்களிலும் பரவியது.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் தீபக் திர்ஷாரி கூறும்போது, ‘‘கதைக்கு முத்தக்காட்சி தேவைப்பட்டதால் காஜல் அகர்வாலிடம் வற்புறுத்தி நடிக்க வைத்தோம்’’ என்றார். காஜல் அகர்வாலும் இந்தி பட மார்க்கெட்டை பிடிப்பதற்காக இந்த முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தார்.

படம் திரைக்கு வந்து முத்த காட்சிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை பார்க்க காஜல் அகர்வால் ஆர்வமாக இருந்தார். ஆனால் தணிக்கை குழு கெடுபிடியால் அவரது ஆசை நிர்மூலமாகி இருக்கிறது.

படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து காஜல் அகர்வாலின் உதட்டோடு உதடு சேர்க்கும் முத்தக்காட்சி ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காட்சி அப்படியே படத்தில் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

பின்னர், 18 வினாடிகள் இடம்பெற்ற அந்த முத்தக்காட்சியை வெட்டி எறிந்து விட்டு படத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்தக் காட்சியை வைத்து இந்தி மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த காஜல் அகர்வாலுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions