யாரிடமும் வாய்ப்பு கேட்காத காஜல் அகர்வால்

Bookmark and Share

யாரிடமும் வாய்ப்பு கேட்காத காஜல் அகர்வால்

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளைப் பற்றி எப்போதுமே ஒரு தவறான கருத்து பரப்பப்படும். அதாவது, இயக்குனர்களிடமும், ஹீரோக்களிடமும் அவர்களது படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்பார்கள் என்ற ஒரு பேச்சு எப்போதும் இருக்கும்.

இதில் உண்மையும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது. பெரிய ஹீரோயினாக வளரும் வரை வாய்ப்புகளைக் கேட்பவர்கள், அதன் பின் அவர்களைத் தேடி வரும் வாய்ப்புகளைக் கூட யோசித்துத்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். தமிழில் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் யாருமே வாய்ப்புகளைக் கேட்பதில்லை. ஆனால், அதையே ஏதாவது ஒரு பேட்டி என்றால் விஜய்யுடன்  நடிக்க ஆசை, அஜித்துடன் நடிக்க ஆசை என மறைமுகமாகக் கேட்டு விடுவார்கள்.

தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது தமிழில் தனுஷுடன் 'மாரி' படத்திலும், விஷாலுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

ஆனாலும், அஜித், விக்ரம் போன்ற மற்ற ஹீரோக்களுடன் காஜல் இதுவரை நடிக்கவில்லை. இருந்தாலும் அஜித், விக்ரம் படங்களில் காஜலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்.

அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் இதுவரை தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டதில்லையாம். “என்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் கதையும் என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.

யாரிடமும் நான் இதுவரை நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டதில்லை, எதிர்காலத்திலும் அப்படி கேட்கவும் மாட்டேன்,” என்று சொல்லியிருக்கிறார் காஜல் அகர்வால்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions