நல்ல பிள்ளையான காஜல்அகர்வால்!

Bookmark and Share

நல்ல பிள்ளையான காஜல்அகர்வால்!

துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த பிறகு முன்னணி நாயகி அந்தஸ்தை பிடித்தார் காஜல்அகர்வால். தற்போது பாயும்புலி, மாரி படங்களில் நடித்துள்ள காஜல், அடுத்தபடியாக மர்ம மனிதன், பிரமோற்சவம் ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.

ஆக, இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும்போது, மேலும் இரண்டு படங்களை கைப்பற்றி விட்டார் காஜல்.

இதையடுத்து இன்னும் சில படங்களில் நடிப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறார். அந்த படங்களும் அவருக்கு எளிதாக கிடைப்பதற்கான சூழல் நிலவியிருக்கிறது. காரணம், தனுஷ், விஷாலுடன் நடித்து விட்டபோதும் இன்னமும் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை காஜல்அகர்வால்.

அதற்கெல்லாம் மேலாக, எத்தனை பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், படப்பிடிப்புக்கு குறித்த நாளில் ஆஜராகாமல் சொதப்புவது காஜலின் வழக்கமாக இருந்து வந்து.

ஆனால், பாயும்புலி, மாரி படங்களில் நடித்தபோது ஒருநாள்கூட அவர் கால்சீட் சொதப்பல் செய்யவில்லையாம். நாளை காலை படப்பிடிப்பு என்றால், முந்தின நாள் இரவே மும்பையில் இருந்து சென்னை வந்து ஹோட்டலில் டேரோ போட்ட விட்டாராம்.

இதனால் காஜலைப்பற்றி நல்லவிதமான கருத்துக்கள் கோலிவுட்டில் நிலவி வருவதால், சில பிரபல தயாரிப்பாளர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions