
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார். தமிழிலும் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
காஜல் அகர்வால் தற்போது, இந்தி ‘குயின்’ படத்தில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் பற்றி காஜலிடம் கேட்ட போது பதில் அளித்த அவர்...
“எனது பெற்றோர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் நான் திரை உலகில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன். எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
எனது எதிர்கால கணவர் நல்ல நண்பராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன். இப்படி நான் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர் கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திப்பேன். என்றாலும், இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை. நடிப்புக்குத்தான் முதல் இடம்” என்று கூறியுள்ளார்.
Post your comment