யாரையும் திருத்துவது என் வேலை இல்லை : காஜல் அகர்வால்

Bookmark and Share

யாரையும் திருத்துவது என் வேலை இல்லை : காஜல் அகர்வால்

பிடிக்காதவர்களை பார்த்தால் கோபம் பொத்திக்கொண்டு வந்தாலும் யாரையும் திருத்துவது என் வேலை இல்லை என்றார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் கூறியது:உங்களுக்கு கோபம் வருமா என்கிறார்கள்? பிடிக்காதவற்றை செய்தால் யார்தான் கோபப்பட மாட்டார்கள்.

அதிலும் நான் ரொம்பவே கோபக்காரி. ஒரு விஷயத்தை செய்வதாக ஒப்புக்கொண்டு செய்யாமல் சாக்குபோக்கு சொல்பவர்களை கண்டால் எனக்கு ரொம்பவே கோபம் வரும். சோம்பேறிகளை பார்த்தாலும் கோபம் பொத்திக்கொண்டு வரும். ஆனால் நான் கோபப்படும் அளவுக்கு இதற்குமுன் எந்த சம்பவமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.

அப்படிப்பட்டவர்களை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்கிறார்கள். மற்ற யாரையும் திருத்துவதற்காக நான் இங்கு வரவில்லை. அப்படிப்பட்ட நபர்களை பார்த்தால் கோபத்தை அடக்கிக்கொள்ளும் கலையும் தெரிந்து வைத்தி ருக்கிறேன்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிப்பதால் மும்பைக்கும் ஐதராபாத்துக்கும் இடையே சுழன்றுக் கொண்டி ருக்கிறேன். மும்பை எனது சொந்த ஊர். ஐதராபாத் நான் வேலை செய்யும் இடம்.

என் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஊரும் இதுதான். இரண்டு ஊர்களிலும் ருசியாக சாப்பிட நல்ல ஓட்டல்கள் நிறைய இருக்கிறது.இவ்வாறு காஜல் அகர் வால் கூறினார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions