பிரபலங்கள் ரசிகர்களை சந்திக்க தயங்கக்கூடாது: காஜல் அகர்வால் பேட்டி

Bookmark and Share

பிரபலங்கள் ரசிகர்களை சந்திக்க தயங்கக்கூடாது: காஜல் அகர்வால் பேட்டி

நடிகை காஜல் அகர்வால் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சினிமாவில் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறேன். இதனால் குடும்பத்தினருடன் செலவிட நேரம் கிடைப்பது இல்லை. எப்போதாவது ஓய்வு கிடைத்தால் வெளியில் சுற்றாமல் வீட்டுக்கு போய்விடுகிறேன். எனது குடும்பத்தினருடன் சேர்ந்து சினிமாவுக்கு போவது, ‘ஷாப்பிங்’ செல்வது என்று சந்தோஷமாக இருப்பேன். அதில் இருக்கும் ஆனந்தம் எதிலும் கிடைக்காது.

வெளியில் செல்லும் போது ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா? என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புவார்கள்.

இன்னும் சிலர் ஆட்டோகிராப் கேட்பார்கள். இதில் என்ன சங்கடம் இருக்கிறது. மக்கள் எப்போதும் சுற்றி இருப்பது அதிர்ஷ்டம். இதை எதிர்பார்த்துத்தான் சினிமாவில் நடிக்க வருகிறோம்.

பிரபலமான பிறகு யாரும் பார்த்துவிடக் கூடாது என்று முக்காடு போட்டு சுற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நடிகர், நடிகைகள் ரசிகர்களை சந்திக்க தயங்கக் கூடாது. நான் நடித்த படங்களை தியேட்டர்களில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்ப்பேன். என் நடிப்பை அவர்கள் பாராட்டி பேசுவதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கும்.

எனது படங்களுக்கு எனது குடும்பத்தினர்தான் விமர்சகர்கள். எனது நடிப்பில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக சொல்லி விடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் சினிமா, நடிப்பு பற்றி சிந்திக்காமல் சாதாரண பெண்ணாக மாறிவிடுவேன்.

நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. இன்னும் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு நாட்களும் முதல் நாள் படப்பிடிப்பு செல்வது போலத்தான் சென்று கொண்டு இருக்கிறேன்.

சினிமா எனக்கு இல்லாமல் போனால் என்ன செய்வேன் என்றெல்லாம் பயப்படுவது இல்லை. கடின உழைப்பை கொடுக்கிறேன். பலனை எதிர்பார்ப்பது இல்லை’’.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions