லாவகமாக காய் நகர்த்தும் காஜல்அகர்வால்!

Bookmark and Share

லாவகமாக காய் நகர்த்தும் காஜல்அகர்வால்!

துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் காஜல்அகர்வால். ஆனபோதும், அதன்பிறகு அவர் எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால் கோலிவுட் அவரை ஓரங்கட்டியது.

இருப்பினும், அதன்பிறகு தனது படக்கூலியை கணிசமான அளவு குறைத்துக்கொண்ட காஜல், தற்போது தனுசுடன் மாரி, விஷாலுடன் பாயும் புலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து விக்ரம் நடிக்கும் மர்ம மனிதன் படத்திலும் நடிக்கிறார்.

இந்த மூன்று படங்களிலுமே காஜல்அகர்வால் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறார். அதோடு, இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோக்களுடன் ஒட்டி உறவாடியிருக்கிறார்.

அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது இளவட்ட ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே விஜய்யுடன் நடித்தபோது தனக்கு கிடைத்த இடம் இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறார் காஜல்.

அதன்காரணமாக, இந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக அடிக்கடி விமானத்தில் பறந்து கொண்டேயிருக்கும் காஜல், தற்போது சென்னையில் முகாமிட்டு அடுத்தகட்டமாக படவேட்டையிலும் இறங்கியிருக்கிறார். தற்போது கோலிவுட்டில் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளும் போட்டாபோட்டியில் ஈடுபட்டிருப்பதால், லாவகமாக காய் நகர்த்தி படங்களை கேட்ச் பண்ணிக்கொண்டிருக்கிறார் காஜல்அகர்வால்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions