எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன்: காஜல் பேட்டி

Bookmark and Share

 எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன்: காஜல் பேட்டி

நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சாகசங்களில் ஈடுபடுவது எனக்கு பிடிக்கும். சினிமாவுக்கு வரும் முன்பே அது எனக்குள் இருந்தது. அந்த துணிச்சல்தான் நடிகையாக மாறவும் உதவியது. புதுபுது விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,

முடியாததை செய்து முடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். மும்பையில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் 3 கிலோ மீட்டருக்கு தள்ளி இருக்கும் ஊர் பற்றிய விவரங்கள் எனக்கு தெரியாது.

வீடு, அதை சுற்றி இருக்கும் மக்கள்தான் என் உலகம் என்று இருந்தேன். வெளி உலகம் பற்றிய அறிவு இல்லை. அப்போதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.

எனது இடத்தில் வேறு யார் இருந்தாலும் நடிக்க சம்மதித்து இருக்க மாட்டார்கள். பயந்து ஒதுங்கி இருப்பார்கள். ஆனால் எனக்கு இயற்கையாகவே இருந்த துணிச்சல் சினிமாவுக்கு இழுத்து வந்தது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கவும் தூண்டியது. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. எனக்கு மொழி தெரியாது. வேறு மாநிலங்களில் படப்பிடிப்புகளுக்காக சுற்ற வேண்டி இருந்தது.

அந்த கஷ்டங்களை எல்லாம் மீறி இப்போது முன்னணி கதாநாயகியாக நிலைத்து இருப்பதற்கு என்னிடம் இருக்கும் தைரியம்தான் காரணம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு போகக்கூடாது என்ற உறுதியான மனநிலையில் இப்போது நான் இருக்கிறேன்.

எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டேன். சினிமாவில் தினமும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். இன்னும் நிறைய சாதிப்பேன்.’’ இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions