மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு

Bookmark and Share

மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு

காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் 4 படங்கள் வந்தன. அவற்றில் இரண்டு படங்கள் விஜய், அஜித்குமாருடன் நடித்தவை.

சீனியர் நடிகர்களுடன் இதுவரை ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் இப்போது இளம் கதாநாயகர்களை தேடுகிறார். இது மார்க்கெட்டை தக்க வைக்கும் தந்திரமாம். இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் அழகாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு ஏற்றமாதிரி இருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறேன். 15 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதிர்ஷ்டம் இல்லாமல் இதெல்லாம் நடக்காது. என் திறமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்துகிறேன்.

தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் அதிக படங்கள் வருகின்றன. இந்த இரு மொழி ரசிகர்களுமே என்னை வட இந்திய நடிகையாக பார்க்காமல் தங்கள் சொந்த மாநிலத்து பெண் போல நேசிக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது. 

சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்கிறேன். இளம் கதாநாயகன் சர்வானந்த். இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவரோடு ஜோடி சேர்வது உங்கள் தகுதிக்கு சரியானதா? என்று பலரும் கேட்கின்றனர்.

காலத்துக்கு ஏற்ப மாறினால்தான் நிலைத்து இருக்க முடியும். இப்போதைய கதாநாயகிகள் திறமையை காட்ட புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நானும் அப்படித்தான். கதை பிடித்து இருந்தால் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கிறேன்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


Post your comment





Related News
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.!
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions