பார்த்தவுடன் காதல் என்பது பொய் - காஜல் அகர்வால்

Bookmark and Share

பார்த்தவுடன் காதல் என்பது பொய் - காஜல் அகர்வால்

தனுஷுடன் மாரி விஷாலுடன் பாயும் புலி என இப்போதைக்கு இரண்டு தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் பேசிக் கொண்டு வருகிறாராம். சமீபத்தில் & மாரி படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

அப்போது வழக்கம் போலவே காதலைப் பற்றியும், அவருக்கு வரப்போகும் கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். காஜல் தமிழில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிகவும் அபூர்வம் என்பதால்தான் இந்த அரதப் பழசான கேள்வி. இருந்தாலும் காஜலின் பதில் புத்தம் புதிதாகவே இருந்தது.

பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜ வாழ்வில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. நானும் காதலிப்பதாக சில செய்திகள் வந்துள்ளன. அது எனக்கும் தெரியாத செய்திதான். எனக்கும் காதலர் இருந்தால் நல்லதுதான். 

ஆனால், எனக்கு காதலிக்க நேரமில்லை. அதே சமயம், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை. எனக்குள் காதல் வந்தால் அதை இந்த உலகத்திற்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்துவேன்.

என்னை திருமணம் செய்து கொள்பவர், நேர்மையானவராகவும், நம்பிக்கையானவராகவும், புரிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions