அஜித் பாணியில் காஜல்அகர்வால்!

Bookmark and Share

அஜித் பாணியில் காஜல்அகர்வால்!

முன்பெல்லாம் தன்னுடன் நடிப்பவர்கள் சூப்பர் பர்பார்மென்ஸ் கொடுப்பதைப் பார்த்து மற்றவர்களெல்லாம் கைதட்டல் கொடுத்தால், காஜல்அகர்வால் மட்டும் அதையெல்லாம் கண்டுகொள்ளாதவரைப்போலவே அமர்ந்திருப்பார்.

அதை விட, டேக் ஓகே ஆனதும் கேரவனுக்குள் செல்பவர், அடுத்த ஷாட் நடிக்க அழைக்கும்போதுதான் வெளியே எட்டிப்பார்ப்பார். இதற்கிடையே இடியே விழுந்தாலும் வெளியில் தலைகாட்ட மாட்டார்.

ஆனால், அப்படியிருந்த காஜல்அகர்வால் இப்போது அடியோடு மாறிப்போயிருக்கிறார். மாரி, பாயும்புலி படங்களில் நடித்து வந்தபோது, மதிய இடைவேளை நேரம்போக மற்ற நேரங்களில் கேரவன் பக்கமே செல்லவில்லையாம். அஜித் பாணியில் மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாராம்.

அதோடு, தனுஷ், விஷால் போன்றவர்கள் நடித்ததைப் பார்த்து அவ்வப்போது கைதட்டியும் உற்சாகப்படுத்தினாராம்.

மேலும், இந்த நடிகர்களின் நடிப்பை வெளியிடங்களில் புகழ்ந்து தள்ளி வரும் அவர், அவர்கள் பக்கா ஜென்டில்மேன் என்றும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வருகிறாராம். காஜலின் இந்த திடீர் புகழுரை நடிகர்களுக்கு அவர் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்கியுள்ளது.


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions