புடவைதான் பெண்களுக்கு அழகு: காஜல் அகர்வால் சொல்கிறார்

Bookmark and Share

புடவைதான் பெண்களுக்கு அழகு: காஜல் அகர்வால் சொல்கிறார்

காஜல் அகர்வால் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘கைதி எண்.150’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஜீவாவுடன் நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் 2 படங்கள் கைவசம் உள்ளன.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-“சினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம். சில நேரங்களில் அதிகமாகவும் கவர்ச்சியில் நடிக்க வேண்டி இருக்கிறது. எனவே நடிகைகள் ஆடை, அலங்காரங்கள் மூலம் தங்களை கவர்ச்சியாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.நானும் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆனாலும் கவர்ச்சியில் ஒரு எல்லைக்கோடு வைத்து இருக்கிறேன்.

அந்த எல்லைக் கோட்டை ஒருபோதும் மீறமாட்டேன்.தெலுங்கில் தயாரான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறேன். அந்த பாடல் காட்சியில் கூட கவர்ச்சி எல்லையை நான் மீறவில்லை. என்னை படங்களில் நாகரிகமான ‘மாடர்ன்’ உடையில் அதிகம் பார்த்து இருப்பார்கள். கலாசார உடையான சேலை அணிந்தும் நடித்து இருக்கிறேன். எனக்கு புடவை அணிவது மிகவும் பிடிக்கும்.

பெண்களுக்கு புடவைதான் அழகு.நான் ‘மாடர்ன்’ உடையில் நடித்த படங்களில் கூட ஒரு காட்சியிலாவது புடவையில் வந்து விடுவேன். புடவையில் இருக்கும் அழகு மாடர்ன் உடையில் இருக்காது. புடவையில் கூட கவர்ச்சியாக தோன்ற முடியும். நாம் எந்த மாதிரியான ஆடைகள் அணிகிறோம் என்பது முக்கியம் இல்லை. அந்த ஆடையில் கவுரவமாக தெரிகிறோமா? என்பதுதான் முக்கியம். நாம் அணியும் ஆடையை பார்த்து மற்றவர்கள் மரியாதை தரவேண்டும்.” 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions