ரூட்டை மாற்றும் காஜல்அகர்வால்!

Bookmark and Share

ரூட்டை மாற்றும் காஜல்அகர்வால்!

தெலுங்கில் காஜல்அகர்வால் கடைசியாக நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அங்கிருந்து அப்படியே தமிழுக்கு தாவி விட்டார். தமிழில் தனுசுடன் மாரியில் நடித்துக்கொண்டிருப்பவர், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார்.

ஆக, தமிழில் இரண்டு படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். மேற்கொண்டும் சில மெகா ஹீரோக்களின் படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

அதோடு, படக்கூலியினையும் கணிசமான அளவு குறைத்துக்கொண்டுள்ள காஜலுக்கு தற்போது படத்துக்குப்படம் ரொமான்ஸ் செய்தோம், டூயட் பாடினோம் என்பதை விட வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறதாம்.

அவரது இந்த மாற்றத்திற்கு காரணம், சமீபத்தில் ராம்சரணுடன் அவர் நடித்த தெலுங்கு படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றது. அதனால் இதே ரூட்டை தொடர்ந்தால் கவர்ச்சி நடிகையாகி விடுவோம் என்று உஷாராகி விட்ட காஜல், இப்போது நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் வித்தியாசமான கேரக்டர்களில் கமிட்டாகி வருவதால், தனது ரூட்டையும் அதேபோன்று மாற்றிக்கொண்டு பர்பாமென்ஸ் நடிகை பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால், எனக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுங்கள் என்று டைரக்டர்களின் காது கடித்து வருகிறார் காஜல்அகர்வால்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions