தயாரிப்பாளர்களை கடுப்பேற்றும் காஜல் அகர்வால்!

Bookmark and Share

தயாரிப்பாளர்களை கடுப்பேற்றும் காஜல் அகர்வால்!

விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா படங்களுக்குப்பிறகு எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால் கோலிவுட் தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டு டோலிவுட்டுக்கு சென்றார் காஜல்அகர்வால்.

யவடு, கோவிந்துடு அந்தாரிவாடலே, டெம்பர் ஆகிய படங்களில் நடித்தார். அதோடு, கவர்ச்சி மழையும் பொழிந்தார்.  ஆனால் அவர் வரிந்து கட்டி நடித்த அந்த படங்கள் எதிர்பார்த்தபடி காஜலுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அதனால் மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்து தனுசுடன் மாரி படத்தில் நடித்துக்கொண்டிருப்பவர், அடுத்தபடியாக சுசீந்திரன் இயக்கும் விஷால் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இதையடுத்து, அரிமா நம்பி டைரக்டர் ஆனந்த் சங்கர் விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர இரண்டு இந்தி படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

ஆக பிசியாகி விட்டார் காஜல். இந்த நிலையில், அவர் எந்த படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தாலும் அவரைச்சுற்றி ஒரு கூட்டமே மொய்த்துக்கொண்டிருக்கிறது. யார் இவர்களெல்லாம்? என்று விசாரித்தால், அவர்கள் அத்தனை பேரும் காஜலின் உதவியாளர்கள் என்கிறார்கள்.

அந்த வகையில், மேக்கப்மேன், காஸ்டியூமர், டச்சப் போன்று பலர் இருந்தும், தனது எடுபிடி வேலைகளுக்காக மட்டுமே 6 பேரை உதவியாளர்களாக வைத்திருக்கிறார் காஜல்அகர்வால்.

இதனால் காஜல் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான உணவு, தங்கும் செலவுகளே ஒரு பெருந்தொகை ஆகி விடுகிறதாம். அதைப்பார்த்து புரொடக்சன்தரப்பில் இருந்து, இத்தனைபேர் தேவைதானா? என்று யாராவது கேட்டால், காஜலின் முகம் கோபத்தில் சிவந்து விடுகிறதாம்.

நான் மட்டுமல்ல எல்லா முன்னணி ஹீரோயினிகளுமே இப்படித்தான் வைத்திருக்கிறார்கள். இந்தி படங்களில் எல்லாம் இதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அதேமாதிரி நீங்களும் கண்டுகொள்ளாமல் இருங்கள் என்றும் கண்டிசனாக பேசுகிறாராம் காஜல். அதனால் காஜலை வைத்து படம் தயாரிப்பவர்கள் உள்ளூர அவர்மீது செம கோபத்தில் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions