காக்க வைக்கும் காஜல்அகர்வால்!

Bookmark and Share

காக்க வைக்கும் காஜல்அகர்வால்!

காஜல் அகர்வாலின் மார்க்கெட் திடீரென்று சூடுபிடித்துள்ளது. தனுசுடன் மாரி படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து விஷால் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

ஆக அடுத்தடுத்து மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் காஜலின் கைவசம் உள்ளது. அதேசமயம், இந்தியிலும் அவர் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் பெரும்பாலும் மும்பையிலேயே முகாமிட்டிருக்கும் காஜல், கால்சீட்டை மொத்தமாக கொடுக்காமல் துண்டு துண்டாக பிரித்து கொடுத்திருக்கிறாராம். விளைவு, இந்தி படத்தில் இன்று பகல் நடித்துக்கொண்டிருந்தால் அந்த படத்தை இரவு முடித்து விட்டு மறுநாள் தமிழ் படத்துக்காக அங்கிருந்து பிளைட்டில் பறந்து வருகிறாராம்.

அதுவும், படப்பிடிப்பு நடக்கும் லொகேசன் ஏதாவது காட்டுப்பகுதியாக இருந்தால் விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு சில மணி நேரங்களை அவர் செலவிட வேண்டியதிருக்கிறதாம். இதனால் காலை 9 மணிக்கே வந்து விடுவதாக சொல்லும் காஜல், மதிய நேரங்களில்தான் படப்பிடிப்பு தளத்தையே சென்றடைகிறதாம்.

இப்படி மாரி படத்தில் நடித்து வந்தபோது சில நாட்கள் யூனிட்டை காக்க வைத்த காஜல்அகர்வால், தற்போது விஷால் படத்திலும் முதல்நாளே தாமதமாக சென்று பலரின் கோபத்துக்கு ஆளாகி விட்டாராம்.

இந்த சேதி கோலிவுட்டில் பரவியதை அடுத்து கால்சீட் சொதப்பல் நடிகை என்று இதற்கு முன்பு காஜல்அகர்வாலை கூறி வந்தவர்கள் இப்போது லேட் நடிகை என்று கூறுகிறார்கள்.


Post your comment





Related News
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions