சிரஞ்சீவி என் மனதில் இடம் பிடித்து விட்டார்: காஜல் அகர்வால்

Bookmark and Share

சிரஞ்சீவி என் மனதில் இடம் பிடித்து விட்டார்: காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“என் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன பிறகும் படங்கள் குறையவில்லை. படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திப்பவர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள்.

யாரையாவது காதலிக்கிறீர்களா? என்று கேட்டால் பரவாயில்லை. ஆனால் திருமணம் பற்றியே பேசுகிறார்கள். எனக்கு திருமணம் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. அதற்கு நேரம் அமையவேண்டும். பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன்.

ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது பற்றியும் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி ஆடுவதில் தவறு இல்லை. எனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். பெரிய கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தால் மறுக்க மாட்டேன். தற்போது தெலுங்கில் ராணாவுடனும் தமிழில் விஜய், அஜித்குமார் ஆகியோருடனும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.

இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல கதைகளாகவும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. இனிமேலும் எனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.

சிரஞ்சீவி படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடைய குடும்பத்தை சேர்ந்த ராம் சரண், பவன்கல்யாண், அல்லுஅர்ஜூன் ஆகியோருடன் ஏற்கனவே நடித்து இருக்கிறேன்.

சிரஞ்சீவி நன்றாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் இணைந்து ஆடுவது பெரிய சவாலாக இருந்தது. எனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் சிரஞ்சீவி என்பேன். அந்த அளவுக்கு எனது மனதில் பதிந்து விட்டார். பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாமல் எல்லோருடனும் சகஜமாக பழகக்கூடியவர்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். 


Post your comment

Related News
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions