நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்

Bookmark and Share

நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்

கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் காஜல் அகர்வால். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ளார். காஜல் அகர்வால் கிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவர்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில் ‘திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான என் மனதுக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமா துறை சம்பந்தப்பட்டவரையோ மணக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காஜல். நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் தனது திருமணத்தையும் ஒத்தி வைத்திருக்கிறார். காஜலின் தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதுடன் ஒரு குழந்தைக்கு தாய் ஆகவும் ஆகிவிட்டார்.

காஜலையும் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர். 


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions