நயன்தாரா, திரிஷாவுக்கு பிறகே திருமணம்: காஜல் அகர்வால்

Bookmark and Share

நயன்தாரா, திரிஷாவுக்கு பிறகே திருமணம்: காஜல் அகர்வால்

காஜல்அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கிறார். சம்பளமும் கணிசமாக வாங்குகிறார்.

தமிழில் தற்போது தனுசுடன் ‘மாரி’, விஷாலுடன் ‘பாயும் புலி’, மற்றும் ‘மர்ம மனிதன்’ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளன. இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே அடுத்து அவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வந்தன. தொழில் அதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வெளிவந்தன. அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் காஜல் அகர்வால் இதனை மறுத்தார். நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கு தகுதியானவரை இதுவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

அதன்பிறகு இதுபோன்ற வதந்திகள் சிலநாட்களாக அடங்கி இருந்தன. தற்போது மீண்டும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதில் அளித்துள்ளார். நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா போன்றோர் எனக்கு சீனியர் நடிகைகள். அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. சீனியர் நடிகைகளுக்கு திருமணம் முடிந்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும் என்று அவர் கூறினார். 

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions