உடல் எடையை பராமரிக்கும் கதாநாயகிகள்

Bookmark and Share

உடல் எடையை பராமரிக்கும் கதாநாயகிகள்

பழைய கதாநாயகிகள் தங்களின் வயது, உடல் எடை போன்ற விவரங்களை வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்தனர். வயதான பிறகும் மேக்கப் மூலம் இளமை தோற்றத்தில் வலம் வந்தார்கள். வயது, உடல் எடை பற்றிய உண்மை விவரங்கள் வெளிப்பட்டால் ரசிகர்களும் டைரக்டர்களும் ஒதுக்கி விடுவார்கள், மார்க்கெட் இழந்து விடுவோம் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இப்போது கதாநாயகிகளால் இதுபோன்ற விஷயங்களை மறைக்க முடியவில்லை. அவர்களின் வயது சம்பந்தமான பிறப்பு சான்றிதழ்களே வெளி வந்து விடுகின்றன. நடிகைகளின் ஜாதகங்களும் இணையதளங்களில் பரவி கிடக்கிறது. அப்படி வெளிச்சத்துக்கு வந்துள்ள இன்றைய கதாநாயகிகளின் உடல் எடை விவரம் வருமாறு:-

அனுஷ்கா, தென் இந்திய நடிகைகளில் உயரமானவர் என்ற தகுதியுடன் இருக்கிறார். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் எடையை 80 கிலோ வரை கூட்டினார். ஆனாலும் எடையை சராசரியாக 62 கிலோவுக்கு கூடாமல் பார்த்துக்கொள்கிறார்.

நடிகைகள் காஜல் அகர்வால், சுருதிஹாசன், தமன்னா ஆகியோரின் உடல் எடை 55 கிலோ. இதில் இருந்து எடை கூடவோ குறையவோ செய்யாமல் ஒரே சீராக வைத்துக்கொள்கின்றனர். இந்த எடையை பராமரிப்பதற்காக உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நடிகைகள் ஸ்ரேயா, டாப்சி ஆகிய இருவரும் தங்கள் உடல் எடையை 52 கிலோவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர்.

திரிஷாவின் உடல் எடை 55 கிலோவாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை 15 வருடங்களுக்கும் மேலாக அவரது உடல் எடை ஒரே அளவில் இருப்பது சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. திரிஷாவும் யோகா பயிற்சியில் தவறாமல் ஈடுபடுகிறார்.

சமந்தாவின் உடல் எடை 51 கிலோவாகவும், நித்யா மேனன் உடல் எடை 58 கிலோவாகவும் இருக்கிறது. 


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions