காஜல்அகர்வாலை டென்சன் செய்யும் பாய் ப்ரண்ட்ஸ்!

Bookmark and Share

காஜல்அகர்வாலை டென்சன் செய்யும் பாய் ப்ரண்ட்ஸ்!

மும்பை நடிகையான காஜல்அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு அனைத்து மொழிகளிலுமே அவர் பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வருகிறார். அந்த அளவுக்கு தனது மார்க்கெட் வீழாமல் கட்டிக்காத்து வருகிறார் காஜல்.

மேலும், காஜலைப் பொறுத்தவரை ரொம்ப ஜாலியான டைப். படப்பிடிப்பு தளங்களில் எப்போதுமே கலகலப்பாக காட்சி தருகிறார். அதோடு, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையிலுள்ள தனது பாய் ப்ரண்ட்சுகளுடன் செம லூட்டியில் ஈடுபடுகிறாராம் காஜல். சில நாட்களில் ஜாலியாக மும்பை நகரை சுற்றித்திரிவதும் உண்டாம்.

அப்படி காஜலுடன் நெருக்கமாக பழகும் நண்பர்கள் அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வந்து விட்டால் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களுக்கும் வந்து நட்பு வளர்க்கிறார்களாம். ஏற்கனவே ஜாலி பார்ட்டியான காஜலும் தான் இருப்பது படப்பிடிப்பு தளம் என்பதைகூட மறந்து நண்பர்களுடன் கலாட்டாவில் ஈடுபட்டு விடுகிறாராம்.

இது துப்பாக்கி, ஜில்லா படங்களில் இருந்து சற்று ஜாஸ்தியாகி விட்டதாம். ஆனால் இந்த அரட்டையை சிலர் பொறுத்துக்கொண்டபோதும் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்துக்கும் காஜலின் மும்பை ப்ரண்ட்ஸ் வந்து அரட்டையில் ஈடுபட, அந்த டைரக்டர்கள் செம காண்டாகி விட்டாராம்.

அதோடு இந்த மாதிரி ப்ரண்ட்சுங்களுடன் லூட்டி அடிப்பதையெல்லாம் ஸ்பாட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும். இது படப்பிடிப்பு நடக்கிற இடம் என்று காஜலிடம் கடிந்து கொண்டாராம்.

விளைவு, இப்போது எந்த பாய் ப்ரண்ட்சுகளையும் படப்பிடிப்பு தளங்கள் பக்கம் நெருங்க விடுவதில்லையாம் காஜல். இருப்பினும், சிலர் அவ்வப்போது அவரை போனில் தொடர்பு கொண்டு டார்ச்சர் கொடுத்து டென்சன் செய்து வருவது தொடர்ந்து வருகிறதாம்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions