இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி

Bookmark and Share

இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி

நாயகிகள் என்றால் அவ்வளவு மரியாதை இருக்கும் அந்த காலத்தில். ஆனால் இந்த காலத்தில் யாரையும் விட்டுவைப்பதில்லை ரசிகர்கள்.

ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களின் மோசமான புகைப்படங்கள் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டன. அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்பட விஷயங்களை யாரும் மறந்திருக்க மாட்டோம். தற்போது இதுபோன்ற சில விஷயங்களால் காஜல் அகர்வால் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

அதாவது எப்போது அவுட்டோர்களுக்கு சென்றால் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் காஜல் அகர்வால், இப்போது யாரையும் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லையாம்.

புகைப்படங்கள் எடுத்து அவற்றை தவறான கோணத்தில் சித்தரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதால் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம் காஜல்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions