அம்மா நடிகை கஜோலுக்கு ரூ.5 கோடி சம்பளம்

Bookmark and Share

அம்மா நடிகை கஜோலுக்கு ரூ.5 கோடி சம்பளம்

மின்சார கனவு படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர் பாலிவுட் ஹீரோயின் கஜோல். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்தி பட ஹீரோ அஜய் தேவ்கனை மணந்த பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

அதன்பிறகு நடிக்க பல வாய்ப்புகள் வந்தும் ஏற்காமல் தவிர்த்தார். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘தில்வாலே’ இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக காஜலுக்கு ரூ.5 கோடி சம்பளம் தரப்படுகிறதாம்.

ரோஹித் ஷெட்டி இப்படத்தை இயக்குகிறார். இதில் வருண் தவான், கிருத்தி சனோன் ஆகியோரும் நடிக்கின்றனர். திருமணத்துக்கு  பிறகு ஸ்ரீதேவி, இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ரீ என்ட்ரி ஆனார்.

அவருக்கு அந்த படத்துக்காக ரூ.1.50 கோடிதான் சம்பளம் தரப்பட்டது. அதேபோல் மீண்டும் நடிக்க வந்த மாதுரி தீட்சித்துக்கு ரூ.2 கோடிதான் சம்பளம். அந்த வகையில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாகிவிட்ட கஜோலுக்கு ரூ.5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரீஎன்ட்ரியான ஐஸ்வர்யா ராய்க்கு இணையாக கஜோலுக்கு சம்பளம் தரப்பட்டுள்ளது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. 

 


Post your comment





Related News
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா?: சமூக வலைதளங்களில் கண்டனம்
தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
பிரசார் பாரதி உறுப்பினராக கஜோல் நியமனம்!
பாலிவுட்டில் சகிப்பின்மை இல்லை: நடிகை கஜோல் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions