பிரசார் பாரதி உறுப்பினராக கஜோல் நியமனம்!

Bookmark and Share

பிரசார் பாரதி உறுப்பினராக கஜோல் நியமனம்!

மத்திய அரசின் பிரசார் பாரதி அமைப்பின் பகுதி நேர உறுப்பினராக, பிரபல இந்தி நடிகை, கஜோல் நியமிக்கப்பட்டு உள்ளார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 5 ஆண்டுகள் கஜோல் இந்த பதவியில் இருப்பார்.

தூர்தர்ஷன், 'டிவி' சேனல், அகில இந்திய வானொலி போன்றவை, மத்திய அரசின் பிரசார் பாரதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. வாரியத்தின் தலைவராக சூர்ய பிரகாஷ் உள்ளார். 

இந்த வாரியத்தில், பகுதி நேர உறுப்பினர்களாக, ஆறு பேர் செயல்படலாம். அதில், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. 

இந்நிலையில், அந்தப் பதவிகளுக்கு, பிரபல இந்தி நடிகை கஜோலும், ஆன்லைன் மீடியா நிறுவனத்தை சேர்ந்த ஷசி சேகர் வேம்பட்டி என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை செயலாளர் சுனில் அரோரா மற்றும் இந்திய பத்திரிக்கையாளர் கவுன்சில் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் ஆகியோ தலைமையிலான குழு கஜோல் மற்றும் வெம்பதியை தேர்வு செய்தது. 

அடுத்ததாக பிப்ரவரி 24-ல் நடைபெறும் பிரசார் பாரதி வாரிய கூட்டத்தில் நடிகை கஜோல் கலந்து கொள்வார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தூர்தர்ஷன் மற்றும் அகில் இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றின் பொதுமேலாளர்கள் நியமனம் தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

 


Post your comment





Related News
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா?: சமூக வலைதளங்களில் கண்டனம்
தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
பாலிவுட்டில் சகிப்பின்மை இல்லை: நடிகை கஜோல் பேச்சு
மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions