காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!

Bookmark and Share

காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய படம் காக்கா முட்டை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட இப்படம் சில விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டதால் திரைக்கு வர தாமதமானது.

எதிர்பார்த்தபடியே தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்று பின்னர் வெளியான காக்கா முட்டை ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால், இப்போது மணிகண்டன் முதல் படத்திலேயே முக்கியமான டைரக்டராகி விட்டார்.

காக்கா முட்டையை இயக்கி முடித்ததும் விதார்த் தயாரித்து நடித்துள்ள குற்றமும் தண்டனையும் என்ற படத்தை இயக்கிய மணிகண்டன், தற்போது தனுஷ் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களை அடுத்தடுத்து இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில, காக்கா முட்டை படத்தில் அண்ணன் தம்பியாக முக்கிய வேடத்தில் நடித்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்-ரமேஷ் இருவருக்கும் அடுத்தபடியாக தனது படத்தில் வாய்ப்பு கொடுக்காத போதும், அவர்களுக்கு சினிமாவில் நல்லதொரு வழிகாட்டியாக இருக்க முடிவெடுத்துள்ளார் மணிகண்டன்.

அதனால், அவர்களை தங்கள் படங்களில் நடிக்க வைக்க யாராவது கதை சொல்ல நினைத்தால், அந்த சிறுவர்களை சார்ந்தவர்களுக்கு பெரிதாக சினிமாவைப்பற்றி தெரியாது என்பதால், தானே அவர்களுக்கான கதைகளை கேட்டு வருகிறார் மணிகண்டன்.

மேலும் காக்கா முட்டையில் நடிக்கத் தொடங்கியபோது விக்னேஷ் 8வதும், ரமேஷ் நான்காவதும் படித்து வந்தனர். ஆனால், அந்த படம் வெளியாக இரண்டு வருடங்கள் ஆகி விட்ட நிலையில், விக்னேஷ் தற்போது பத்தாவது படிக்கிறார். தம்பியாக நடித்த ரமேஷ் 6வது படித்து வருகிறார்.

அதனால் அவர்களின் வயதை கணக்கில் கொண்டு அதற்கேற்ற கதைகள் தேடப்பட்டு வருகிறதாம்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions