'காக்கா முட்டை' படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு

Bookmark and Share

'காக்கா முட்டை' படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு

சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது, ஆகிய விருதுகளைப் பெற்ற 'காக்கா முட்டை' திரைப்படம் நேற்று முன் தினம் வெள்ளிக் கிழமை இந்தியா முழுவதும் வெளியானது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான நாளன்றே பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் அமைந்தது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பொதுவாக விருது வாங்கும் படங்கள் என்றாலே தியேட்டர்களில் வெளியிட்டால் குறைவான எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள். அந்த ஒரு விஷயத்தை இந்தப் படம் உடைத்து விட்டது என திரையுலகினர் பெருமையுடன் சொல்கிறார்கள்.

முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் கூட கடந்த சில வாரங்களில் வெளியான போது ஹவுஸ்ஃபுல்லாக ஆகாத நிலையில் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல்லானது பெரிய விஷயம் என்கிறார்கள். படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து நேற்றே கூடுதலாக பல திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

வெளியான முதல் நாளன்று மட்டும் சுமார் 1 கோடி வரை படம் வசூலித்திருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதியில் மட்டும் சுமார் 3 கோடி வரை படம் வசூலிக்கலாம் என்கிறார்கள்.

இது வியாபார ரீதியாக படத்திற்கு மிகப் பெரும் லாபமாக அமையுமாம்.  இது போன்ற நல்ல படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கிடைத்தால் தரம் கெட்டுப் போயிருக்கும் தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்கும் என உதவி இயக்குனர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions