பட்ஜெட் 80 லட்சம்... வசூல் 8 கோடி... இது காக்கா முட்டை கணக்கு

Bookmark and Share

பட்ஜெட் 80 லட்சம்... வசூல் 8 கோடி... இது காக்கா முட்டை கணக்கு

பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மாஸ் படம் எதிர்பார்த்த வசூலைக்குவிக்கவில்லை. யாருமே எதிர்பாராதவகையில் காக்கை முட்டை படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.  காக்கா முட்டை படம்  வெளியாகி ஆறு நாட்களாகின்றன.  

இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி வசூலித்திருக்கிறது என்று சொல்கின்றனர் காக்கா முட்டை பட விநியோகத்தில் சம்மந்தப்பட்டவர்கள். 

காக்கா முட்டை படம் ரிலீஸ் ஆன தினத்தில் பல ஊர்களில் மினி தியேட்டர்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் காக்கா முட்டை படத்துக்கு அலைமோதிய கூட்டத்தைக் கண்டு தமிழகத்தின் பல ஊர்களில் பெரிய தியேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் 3 நாட்களில் வசூல் அதிகரித்ததை அடுத்து தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் நாட்களில் காக்கா முட்டை வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்களில் 8 கோடி வசூலித்ததோடு, சாட்டிலைட் உரிமையை விற்றவகையிலும்  1 கோடி கிடைத்திருக்கிறது. திரைப்படவிழாக்களில் படத்தை திரையிட்ட வகையிலும் சில கோடிகளை ஏற்கனவே சம்பாதித்துக் கொடுத்துவிட்டது காக்கா முட்டை.

இவை தவிர பிற மொழி உரிமையை விற்கும்போதும் சில கோடிகள் கிடைக்கும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது காக்கா முட்டை சுமார் 15 கோடியை லாபமாக கொடுக்கும் என்று கணிக்கிறார்கள் சினிமா வியாபாரிகள்.

இவ்வளவு லாபத்தைக் கொடுத்திருக்கும் காக்கா முட்டை படத்தின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் 80 லட்சம்தான்.  அதாவது இப்படத்தை எடுக்க தனுஷிடமிருந்து வெற்றிமாறன் வாங்கியது ஒன்றரை கோடி.

மணிகண்டனிடம் இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்த தொகை 80 லட்சம்தான். இந்த சிறு தொகையில்தான் 61 நாள் படப்பிடிப்பு நடத்தி அருமையான படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.

வெற்றிமாறனிடம் ஒன்றரை கோடியைக் கொடுத்ததால், தனுஷைப் பொறுத்தவரை காக்கா முட்டை படத்துக்கு அவர் செய்த முதலீடு  ஒன்றரை கோடி.  ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு 2.20 கோடிக்கு விற்றவகையில் 70 லட்சம் லாபம் பார்த்திருக்கிறார் தனுஷ். அவரிடமிருந்து 2.20 கோடிக்கு படத்தை வாங்கிய ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 1.5 கோடிக்கு பப்ளிசிட்டி செய்து பல மடங்கு லாபத்தை அள்ளிக்கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions