ஒரு முட்டை யின் 50 சாதனை...!

Bookmark and Share

ஒரு  முட்டை யின்  50  சாதனை...!

தமிழ்த் திரையுலகம் இன்று இருக்கும் சூழ்நிலையில் ஒரு படம் நான்கைந்து நாட்கள் தாக்குப் பிடிப்பதே பெரும் விஷயமாக உள்ளது. ஒரு படம் வெள்ளிக் கிழமையன்று வெளிவந்தால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே அதிக வசூலை அள்ளித் தருகிறது, அதுவும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே. திங்கட்கிழமைகளில் இருந்து நல்ல படமாக இருந்தாலும் அதுவும் குறைந்துவிடுகிறது என்கிறார்கள்.  

100வது நாள் என்ற ஒரு  விஷயத்தைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. 50 நாட்களைத் தாண்டுவதுதான் இப்போது ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் சில படங்கள் 5 நாட்களைக் கூட தாண்டாமல் போய்விடுகிறது. அதில் முன்னணி நடிகர்களின் படங்களும் அடக்கம்.

பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டு சில கோடிகள் விளம்பரச் செலவு செய்த படங்கள் கூட மண்ணைக் கவ்விய வரலாறு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்படியிருக்க, சிறுவர்கள் மட்டுமே நடித்து லட்சங்களில் மட்டுமே செலவழிக்கப்பட்ட  காக்கா முட்டை  படம் வெற்றிகரமாக 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக பெரும் செலவு செய்து விளம்பரமெல்லாமும் செய்யவில்லை.

படம் நன்றாக இருக்கிறது என்ற  மவுத் டாக் கே படத்திற்கு வசூலை அள்ளிக் கொடுத்திருக்கிறது. இந்த மாதிரியான தேசிய விருது பெற்ற படங்களின் வெற்றியும், நல்ல தமிழ் சினிமா தொடர்ந்து வர காரணமாக அமைகிறது. இந்தப் படத்தைக் கொடுத்த இயக்குனரை வாழ்த்துவதோடு, நல்ல படத்தை வரவேற்ற  ரசிகர்களை வாழ்த்துவதும் தான் முக்கியமானது. 

 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions