ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!

Bookmark and Share

ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து போகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை காக்கா முட்டைக்குக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்துக்கு பதில் 'கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடந்துள்ளனர்.

'கோர்ட்' படம் கடந்த செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'கோர்ட்' மும்பை, வியன்னா, அண்டால்யா, சிங்கப்பூர் என்று பல நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இதுவரை 18 விருதுகளைப் பெற்றுள்ளது.

மக்கள் விரோத அரசுக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவை காவல்துறை கைது செய்கிறது.

மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

இது உண்மையா? அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு பாடம் புகட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா? என்பதை நீதிமன்றத்தில் தன் வாதங்கள் மூலமாக நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்குரைஞர் போராடுகிறார்.

இது நாயகன் இது வில்லன் என்பது போன்ற ஒற்றைத்தன்மையான காட்சி சித்தரிப்புகள் படத்தில் கிடையாது. சொல்லப்போனால் படத்திற்கு ஹீரோவே கிடையாது. படத்தின் மிக முக்கியமான விஷயம், எவ்வித நேரடி வசனங்களும் இல்லாமல், இந்திய நீதித்துறையின் அவலங்களை சுட்டிக்காட்டுவதுதான்.

இந்த அற்புதமான படம், இந்தியா சார்பில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாகுபலி, என்.எச்.10, பஜ்ரங்கி பாய்ஜான், பிக்கு ஆகிய படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்காக தேர்வு குழுவால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions