காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு

Bookmark and Share

காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு

சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காக்கா முட்டை, தேசிய விருது உள்பட பல விருதுகளை அள்ளிக் குவித்ததோடு 80 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படம் 20 கோடி வரை வசூலித்து அவார்ட் படங்கள் வசூலிக்காது என்பதை முறியடித்து சாதனை படைத்தது.

படம் ஓடி முடிந்திருக்கும் நிலையில் தற்போது படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அகில இந்திய வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.மணிவண்ணன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் காக்க முட்டை படத்திற்கு எதிராக ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: காக்க முட்டை படத்தில் வக்கீல்களை இழிவுபடுத்தும் விதமாகவும், வக்கீல் தொழிலை கொச்சைப்படுத்தும் விதமாகவும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

எனவே படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறன், இயக்குனர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரித்த நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் கோர்டில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ந் தேதி ஒத்தி வைத்தது.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions