ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளாத காக்க முட்டை டீம்

Bookmark and Share

ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளாத காக்க முட்டை டீம்

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவான காக்க முட்டை தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. நல்ல படங்கள் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. விருது வாங்கும் படம் தியேட்டரில் ஓடாது என்கிற செண்டிமெண்டை உடைத்து எரிந்திருக்கிறது. சினிமா வாசனையே இல்லாத இரண்டு குடிசைப் பகுதி ஏழை சிறுவர்களுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு அந்த சிறுவர்களை சினிமாவும், வெளி உலகமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதில் ஒரு சேரித்தாயாகவே வாழ்ந்த ஐஸ்வர்யாவை ஏனோ யாரும் கண்டு கொள்ளவே இல்லை. சிறுவர்கள் ரமேசும், விக்னேசும் சேரிச் சிறுவர்களாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட அவர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். சிறுவர்கள் தங்களின் யதார்த்தமான இயல்புகளைத்தான் படதில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால் நிறைய படித்த, நல்ல வசதியுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சேரிப்பெண்ணாக வாழ்ந்து காட்டியிருப்பது சிறுவர்களின் உழைப்பு, நடிப்பை விட பெரியது என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறுவர்களை கொண்டாடுகிற அளவிற்கு ஐஸ்வர்யாவை கொண்டாட வில்லையே ஏன்?. படத்தின் புரமோஷன், போஸ்டர், விளம்பரங்களில்கூட ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. விருது வாங்கினால்தான் அங்கீகாரமா என்ற கேள்வி எழுகிறது.

ஐஸ்வர்யாவிற்கு விருது கிடைக்காமல் போனதற்கு காரணம் படக் குழுவினர்தான் என்பது கசப்பான உண்மை. காக்க முட்டையில் இரண்டு சிறுவர்களும்தான் கதையின் நாயகர்கள் ஐஸ்வர்யா அவர்களின் தாயாகத்தான் நடித்துள்ளாரே தவிர படத்தின் நாயகி அல்ல. அப்படி இருக்கும்போது அவரை சப்போர்டிங்க ஆர்ட்டிஸ் என்ற பிரிவின்கீழ்தான் விருது கமிட்டிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ஹீரோயின் பிரிவுக்கு அனுப்பினார்கள்.

அந்தப் போட்டியில் கங்கணா ரணவத் வென்று விட்டார். அதாவது ஜூனியர் பிரிவில் ஓட வேண்டியவரை சீனியர் பிரிவில் ஓட விடுவது மாதிரி செய்து விட்டார்கள். அப்படி இருந்தும் சில புள்ளிகள் வித்தியாசத்தில்தான் ஐஸ்வர்யா விருதை இழந்தார். தேசிய விருது மட்டுமே நடிப்புக்கான அங்கீகாரம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Post your comment





Related News
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்
காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!
காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions