'காக்கா முட்டை'க்கு மேலும் ஒரு விருது!

Bookmark and Share

'காக்கா முட்டை'க்கு மேலும் ஒரு விருது!

2014ம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் திரைப்பட தேசிய விருது மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது என இரண்டு முக்கிய தேசிய விருதுகளைப் பெற்ற 'காக்கா முட்டை' திரைப்படம் தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டையும், விருதுகளையும் குவித்து வரும் படமாக அமைந்துள்ள இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கியிருக்கிறார். சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், பாபு ஆண்டனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ் ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இது. சென்னை மாநகர குடிசைப் பகுதிகளில் வாழும் இரண்டு சிறுவர்கள் பீட்சாவை வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மிகவும் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது.

இப்போது இந்தப் படம் இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் நடைபெற உள்ள 25வது ஆசிய ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவில் சிறந்த உள்நாட்டுக் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய படத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு நேற்று திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் அனைவருமே கைதட்டி பாராட்டுக்களை வெளிப்படுத்தினர். இப்படம் நாளை மறுநாள் ஜுன் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்
காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!
காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions