ஜிகினா இசையை வெளியிட்ட புதிய வி.ஐ.பிக்கள்

Bookmark and Share

ஜிகினா இசையை வெளியிட்ட புதிய வி.ஐ.பிக்கள்

ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி போன்ற படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. இரண்டு படங்களுடே சரியாக ஓடவில்லை. எனவே தன் பெயரை ரவி நந்தா பெரியசாமி என மாற்றிக் கொண்டு தற்போது அவர் இயக்கியுள்ள படம் ஜிகினா விஜய் வசந்த் மற்றும் சிறுவர்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசை அமைத்திருக்கிறார். ரவி நந்தா பெரியசாமியும் லிங்குசாமியும் ஒருகாலத்தில் அறைத்தோழர்கள். அந்த அடிப்படையில், ஜிகினா படத்தை லிங்குசாமி தன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் வாயிலாக வெளியிடுகிறார். பெரிய நட்சத்திரங்கள் அல்லது வி.ஐ.பி.க்கள் முன்னிலையில் இசை வெளியீட்டுவிழா நடைபெறுவதுதான் வழக்கமான விஷயம்.

ஜிகினா படத்தின் இசையை தனியார் எஃப்.எம்மில் வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்! காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இரவரும் ஜிகினா படத்தின் இசையை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியாகி செமத்தியான வசூலையும் அள்ளியுள்ள காக்கா முட்டை படத்தின் மூலம் இந்த சிறுவர்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த சிறுவர்களின் பாப்புலாரிட்டியை தங்கள் படத்துக்கு பப்ளிசிட்டியாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர் ஜிகினா தயாரிப்பாளரும், இயக்குநரும்.


Post your comment





Related News
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்
காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!
காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions