காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்

Bookmark and Share

காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே தன் பக்கம் பார்க்க வைத்த படம் ‘காக்கா முட்டை’. மேல்தட்டு மக்களால் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்சாவை, குடிசைப் பகுதியில் வசித்து வரும் இரண்டு சிறுவர்கள் சாப்பிட ஆசைப்படுவதை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை மணிகண்டன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். 

இவர் இயக்கிய இந்த முதல் படமே ‘தேசிய விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளதால், ஒட்டுமொத்த கோலிவுட் தயாரிப்பாளர்களின் பார்வையும் தற்போது இவர் பக்கம் திரும்பியுள்ளது. கடைசியில் இவர் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பு மதுரை அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கிட்டியுள்ளது. 

இந்நிறுவனம் தயாரிப்பில் முழுக்க முழுக்க காமெடியான, பொழுதுபோக்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார் மணிகண்டன். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்த விவரத்தை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்
காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!
காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு
காக்கா முட்டை படம் பார்த்த குழந்தைகளுக்கு பீட்சா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions