இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்...?

Bookmark and Share

இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்...?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் என்பது படங்களை வெளியிட உகந்த மாதம் அல்ல, என்பதுதான் திரையுலகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக இருக்கும். புதிய ஆண்டு பிறந்ததும் பொங்கலுக்கும், குடியரசு தினத்திற்கும் அடுத்து பிப்ரவரி இரண்டு வாரங்களுக்குள்ளும்தான் பொதுவாக புதிய படங்களை வெளியிடுவது வழக்கமாக இருக்கும்.

மாணவ, மாணவிகளுக்கு பரீட்சை ஆரம்பித்து விட்டால் தியேட்டர் பக்கம் பிப்ரவரி, மார்ச் மாதம் அவ்வளவாக கூட்டம் இருக்காது. அதோடு ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் புதிய படங்களை வெளியிடுவார்கள்.

தற்போது எல்லாமே மாறிவிட்டது. மார்ச் மாதமே பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன. இதனிடையே பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான வரும் 27ம் தேதி 6 படங்கள் வரை வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள 'காக்கி சட்டை', சத்யா, ஸ்ரீமுகி நடித்துள்ள 'எட்டுத் திக்கும் மதயானை', மகேஷ், அனன்யா நடித்துள்ள 'இரவும் பகலும்', அருண், விஜய், கோபிகா, சுமி, ரிச்சா மற்றும் பலர் நடித்துள்ள 'சொன்னா போச்சு', பிரஜன், தனிஷ்கா மற்றும் பலர் நடித்துள்ள 'மணல் நகரம்', 'பசங்க' கிஷோர், ஸ்ரீராம், பாண்டி நடித்துள்ள 'வஜ்ரம்', ஆகிய ஆறு படங்கள் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு பிறந்த பிறகு ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவது இந்த வாரத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions