2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் காக்கி சட்டை

Bookmark and Share

2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் காக்கி சட்டை

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.  3 படத்தில் காமெடியனாக தலைகாட்டி, மெரீனா, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் காமெடி ஹீரோவாக தனது பாணியை வகுத்துக் கொண்டார் சிவகார்த்திகேயன்.

வெறும் காமெடி வேலைக்கு ஆகாது என்பதைப் புரிந்து கொண்டு, கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த மான்கராத்தே படத்தில் பரீட்சார்த்த முயற்சியாக காமெடியோடு கொஞ்சம் ஆக்ஷனையும் கலந்து நடித்தார்.  

பாக்ஸர் பீட்டர் கேரக்டருக்கு அவரே எதிர்பார்க்காதவகையில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த நம்பிக்கையில்தான் தற்போது காக்கி சட்டை படத்தில் ஒருபடி மேலேபோய் மதிமாறன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக முழுநீள ஆக்ஷன் ஹீரோவாகி இருக்கிறார் சிவா.

தணிக்கையில் யு சர்டிஃபிகேட் வாங்கியுள்ளது காக்கி சட்டை. படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. மொத்தம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடுகிறதாம் காக்கி சட்டை படம்.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான மான் கராத்தே 2 மணி நேரம் 37 நிமிடங்களும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 மணி நேரம் 31 நிமிடங்களும் ஓடக்கூடியதாக இருந்தன.  

இந்த இரண்டு படங்களைப் போலவே காக்கி சட்டையின் ரன்னிங் டைமும் அமைந்திருப்பதால்,  காக்கி சட்டை படம் விறுவிறுப்பாக இருக்கும் என் நம்பலாம்.

 


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions