காக்கிச்சட்டை: சிவகார்த்திகேயன் காமெடி போலீஸா இல்லை சிங்கமா?

Bookmark and Share

காக்கிச்சட்டை: சிவகார்த்திகேயன் காமெடி போலீஸா இல்லை சிங்கமா?

சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பெரிதாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்திராதவர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் அவர் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் காக்கிச் சட்டை. தனுஷ் தயாரித்துள்ள இந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அடுத்து காக்கிச் சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.காக்கிச் சட்டையில் கம்பீரமாக வரும் சிவகார்த்திகேயனின் பெயர் மதிமாறன்.

காக்கிச் சட்டை சிவகார்த்திகேயனுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.சிவகார்த்திகேயன் காக்கி சீருடையில் கொத்தாகத் தான் உள்ளார். அவர் காமெடி போலீஸா இல்லை சீரியஸ் போலீஸா என்பது தான் தெரியவில்லை.

முதலில் இந்த படத்திற்கு டாணா என்று பெயர் வைத்தார்கள். பின்னர் அதை காக்கிச் சட்டை என்று மாற்றினர். அதே போன்று முதலில் அமலா பால் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.

அவர் படத்தில் இருந்து வெளியேற அந்த வாய்ப்பு ஸ்ரீதிவ்யாவுக்கு கிடைத்தது.காக்கிச் சட்டை படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஐ உள்ளிட்ட பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸானதால் காக்கிச் சட்டையின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


Post your comment





Related News
காக்கி சட்டை 50 கோடி வசூல் ?
வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை
\'காக்கி சட்டை\' ரிலீஸ் தேதி சரியா...?
தனுஷ் படத்திற்கு நிகராக காக்கிசட்டை முதல் நாள் வசூல்! முழு விவரம்
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ
அதிக எதிர்பார்ப்பில் \'காக்சி சட்டை\'... ?
2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் காக்கி சட்டை
கள்ளபடத்தின் இசையை வெளியிட்டார் விஷால்
காக்கி சட்டை டைட்டிலுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?: இயக்குனர் விளக்கம்
கோவை ஏரியாவில் 50 திரையரங்குகளில் காக்கி சட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions