
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த மான் கராத்தே படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அல்ல அதையும் தாண்டி பிசினஸ் ஆனது. பிசினஸ் ஆனது மட்டுமல்ல அதற்கும் மேல் லாபம் கிடைத்தது.
அதனால் இப்போது தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் காக்கி சட்டை படத்துக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. காக்கி சட்டை படத்தின் தமிழக உரிமையை தனுஷிடமிருந்து பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறது மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு விற்பனையும் செய்திருக்கிறது. மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்து சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காக்கி சட்டையின் கோயமுத்தூர் விநியோக உரிமையை காஸ்மோ ஃபிலிம்ஸ் சிவா வாங்கி இருக்கிறார். இவர் பெரும்பாலும் அஜித், விஜய் நடித்த படங்களையே பெரும்பாலும் வாங்கி வெளியிடுவார்.
விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா, கத்தி, அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் போன்ற படங்களை சிவாதான் வாங்கி வெளியிட்டார். சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு அப்படத்தை வெற்றியடைய வைத்து மற்றவர்களை தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தார்.
இப்போது சிவகார்த்திகேயனின் படத்தை இவர் வாங்கியிருப்பதால் கோயமுத்தூரில் காக்கி சட்டைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கோவை ஏரியாவில் மட்டும் குறைந்தது 50 திரையரங்குகளிலாவது காக்கி சட்டை படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார் காஸ்மோ சிவா. பெரிய சாதனைதான்!
Post your comment