அதிக எதிர்பார்ப்பில் 'காக்சி சட்டை'... ?

Bookmark and Share

அதிக எதிர்பார்ப்பில் 'காக்சி சட்டை'... ?

தீபாவளிக்கு 'கத்தி', டிசம்பரில் 'லிங்கா', பொங்கலுக்கு 'ஐ', பிப்ரவரி ஆரம்பத்தில் 'என்னை அறிந்தால்'  ஆகிய படங்கள் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக அமைந்தன.

அந்த வரிசையில் தற்போது பிப்ரவரி கடைசியில் 'காக்கி சட்டை' படம் இருப்பதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பதும், சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் மார்க்கெட் நிலவரமும் அதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

'காக்கி சட்டை' படம் எப்போதோ முடிந்து தயாராக இருந்தாலும் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் வெளியான பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள்.

அதனால்தான் 'அனேகன்' படம் வெளிவந்த பிறகு இரண்டு வாரங்கள் கழித்து இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 400 திரையரங்குகளிலும் மற்ற இடங்களில் சுமார் 300 திரையரங்குகளிலும் 'காக்கி சட்டை' வெளியாக உள்ளதாம்.

அதனால் சமீப காலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களின் வரிசையிலும் இந்தப் படம் இடம் பிடித்துவிட்டது என்கிறார்கள். “கத்தி, லிங்கா, ஐ, என்னை அறிந்தால்" ஆகிய படங்களின் முதல் நாள் அல்லது முதல் வாரக் கடைசி வசூலை 'காக்கி சட்டை' எட்டிப் பிடிக்குமா என்தே கோலிவுட் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த வரிசை நடிகர்களின் வியாபார வட்டத்தில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்து விடுவாராம். தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தை மிஞ்சும் வசூல் கண்டிப்பாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளியாக உள்ள 'ரஜினி முருகன்' பட வியாபாரம் இப்போதே பல கோடிகளுக்கு முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

அதனால், 'காக்கி சட்டை' படத்தின் ரிசல்ட் எந்தவிதத்திலும் 'ரஜினி முருகன்' படத்தின் வியாபாரத்தை  பாதிக்க வாய்ப்பேயில்லையாம். இருந்தாலும் 'காக்கி சட்டை' சிவகார்த்திகேயனுக்கு கரெக்ட் ஆக ஃபிட் ஆகிவிட்டால் வசூலைக் குவித்துவிடும் என்றுதான் எதிர்பார்ப்பு உள்ளதாம்.


Post your comment





Related News
காக்கி சட்டை 50 கோடி வசூல் ?
வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை
\'காக்கி சட்டை\' ரிலீஸ் தேதி சரியா...?
தனுஷ் படத்திற்கு நிகராக காக்கிசட்டை முதல் நாள் வசூல்! முழு விவரம்
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ
2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் காக்கி சட்டை
கள்ளபடத்தின் இசையை வெளியிட்டார் விஷால்
காக்கி சட்டை டைட்டிலுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?: இயக்குனர் விளக்கம்
கோவை ஏரியாவில் 50 திரையரங்குகளில் காக்கி சட்டை
விஷால் படத்தை இயக்கும் காக்கி சட்டை இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions